உள்ளூர் செய்திகள்

ஒன்பது வந்தது எப்படி?

'பாழெனக் காலெனப்பாகென ஒன்றென இரண்டென மூன்றெனநான்கென ஐந்தென ஆறென ஏழெனஎட்டெனத் தொண்டென நால்வகை பூழிளண்நவிற்றும் சிறப்பினை'ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட -பரிபாடலில் வரும் பாடல் ஒன்றின் சிறுபகுதி இது. இதில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். மற்ற எண்கள் எல்லாம் தற்போதைய வழக்குப்படியே இருக்க, ஒன்பது மட்டும் 'தொண்டு' என்னும் பெயரில் வந்திருக்கிறது.ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர் 'தொண்டு' என்பது. தொல்காப்பியர் காலத்திற்கு முன் அப்படித்தான் வழங்கியது. தொல்காப்பியர், அதற்குப் பிற்பட்ட காலத்தில் செய்யுளில் மட்டும் தொண்டு என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.தொண்டுடன் அதாவது ஒன்பதுடன் பத்து சேர்ந்தால், தொண்பது என்று அழைக்கப்பட்டது. (தொண்டு + பத்து = தொண்பது)தொண்பது, 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களைப் போலவே தொண்பதும் அழைக்கப்பட்டது.தொண்ணூறு என்னும் பெயர், 900 என்னும் எண்ணைக் குறித்தது.தொண்டு + நூறு = தொண்ணூறு. அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்று குறிப்பிடுவது போல.தொள்ளாயிரம் என்பது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. (தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்)ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம் என்னும் பிற எண்களைப் போலவே இதுவும் அழைக்கப்பட்டது.தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து,'நொ(தொ)ண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே.' (செய்.101) என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். 'தொண்டுபடு திவ்வின்' (மலைபடு கடாம். 21) என்கிறார் பெருங்கெளசிகனார்.தொண்டு என்பது பின்னர் வழக்கொழிந்தது.பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரம் நூறாம் இடத்திற்கும் வந்தன.தொன்பது என்னும் பெயர், முதன்மெய் (தொ) நீங்கி, ஒன்பது என்று வழங்கப்படுகிறது. தெலுங்கில் தொம்மிதி என்று வழங்கப்படுகிறது. ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது. எண் - பண்டைப்பெயர் - இன்றைப்பெயர்9 - தொண்டு - ஒன்பது 90 - தொண்பது - தொண்ணூறு900 - தொண்ணூறு - தொள்ளாயிரம்9000 - தொள்ளாயிரம் - ஒன்பதினாயிரம்ஆதாரம்: தேவநேயப்பாவாணரின் 'ஒப்பியன் மொழிநூல்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !