உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

1. சென்னையில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று புழல். இதற்கு சோழர் காலத்தில் இன்னொரு பெயர் உண்டு. அது என்ன?___________________________2. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் மற்றொரு பெயர் தில்லை. இதற்கு இன்னொரு பழமையான பெயர் உண்டு என்பதை நடராஜர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அந்தப் பெயர் என்ன? __________________________3. இரண்டாம் குலோத்துங்கன் (பொ.யு.1133 ---1150) காலத்தில், பார்வை இழந்த பதினாறு பேர், ஒரு கோயிலில் தேவாரம் பாடும் திருப்பாட்டு ஓதுவார்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு வழிகாட்ட 'கண்காட்டுவார்' என்று அழைக்கப்படும் ஒருவர் இருந்தார். இந்த நிகழ்வு நடந்த கோயில் எங்குள்ளது?___________________________4. இந்துஸ்தானத்தின் கிளி என்று அழைக்கப்படுபவர் இவர். கில்ஜி அரசர்களின் அவையில் கவிஞராக இருந்தார். மாலிக்காபூரின் தமிழகப் படையெடுப்பின் போது உடன் வந்து, பயணக்குறிப்புகள் எழுதிய இவர் யார்? ___________________________5. சன்னியாசிகளை அழைத்து இந்து மத வேதங்களைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தார். இந்து மத நூல்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார். மொகலாயர்களுக்கான தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கைவிட்டார் என்று, ஆலம்கீர் நாமா நுால் குறிப்பிடும், ஷாஜகானின் மகன் யார்?___________________________விடைகள்:1. ராஜசுந்தரி நல்லூர்.2. பெரும்பற்றப்புலியூர்3. விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் 4. அமீர் குஸ்ரு5. தாரா ஷிகோ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !