UPDATED : ஜன 23, 2024 10:06 PM | ADDED : ஜன 23, 2024 06:05 PM
காலையில் கும்பாபிஷேகம் நடந்த ராமர் கோவிலில் மாலையில் நடைபெற்ற லேசர் ஷோ நடைபெற்றது.
இந்த லேசர் ஷோவைப் பார்த்த மக்கள் பிரமித்துப் போயினர்.
கோவிலின் முகப்பு பகுதியில் குழந்தை ராமர் உள்ளீட்ட பல கடவுள் படங்கள் லேசர் ஒளியில் தோன்றியதைக் கண்ட பக்தர்கள் பரவசப்பட்டனர்.
மாலையில் விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் வேண்டுகோளின்படி, கோவிலைச் சுற்றிலும் மற்றும் சரயு நதிக்கரையிலும் பல ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, அதன் தெய்வீக ஒளியும் எங்கும் காணமுடிந்தது.
இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டு ராமர் தரிசனம் பார்க்கலாம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
மூன்று ஆண்டுகள் பல அடுக்கு பாதுகாப்பு காரணமாக என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த இடத்தில், ஒரு சொர்கத்தையே சிருஷ்டித்துள்ளனர் என்று சொல்லுமளவு எங்கும் எதிலும் காணப்படும் பிரம்மாண்டத்தைக் காண மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.