உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / அயோத்தியில் பிர்மாண்டமான ஜடாயு சிற்பம்

அயோத்தியில் பிர்மாண்டமான ஜடாயு சிற்பம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் நெருங்கிவரும் நிலையில் ஜடாயுவின் பிரம்மாண்டமான சிற்பம் நிர்மாணிக்கப்பட்டு .உள்ளது.சில நாட்களுக்கு முன் கருடாழ்வார்,யானை,சிம்மம் சிற்பங்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜடாயு சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.இராமாயணத்தில் ஜடாயுவிற்கு முக்கிய பங்கு உண்டு.ஜடாயு கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் . இவர் கருடனின் தம்பியான அருணனின் மகனாவார். ராமர் சீதையுடன் வனவாசத்தில் இருக்கும் போது சீதைக்குத் துணையாக இருந்தவர்.ராவணன் சீதையைச் சிறைப்பிடித்துச் செல்லும்போது,ராவணனுடன் சண்டையிட்டு காயமடைந்தவர்.சீதையைத் தேடி ராமர் வரும்போது அவரிடம் நடந்த சம்பவங்களை கூறிவிட்டு உயிர்விட்டவர்.பார்வையாளர்கள் வியந்து பார்க்கக்கூடிய சிற்பங்களில் ஒன்றாக ஜடாயு சிற்பமும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை