உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஒரு தலைப்பாகைக்கு பின்னால் இருக்கும் கதை

ஒரு தலைப்பாகைக்கு பின்னால் இருக்கும் கதை

ஒரு தலைப்பாகைக்கு பின்னால் இருக்கும் கதைபிரதமர் மோடி சமீபத்தில் ஜம்முவில் பிரச்சாரம் செய்யும் போது அணிந்திருந்த தலைப்பாகை பலரது கவனத்தையும் ஈர்த்தது.இப்போது அந்த தலைப்பாகையை உருவாக்கியவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.மணீஷ்சிங் ஜம்வால்தான் அவர்,ஜம்முவைச் சேர்ந்தவர்,தலைப்பாகை செய்வதை குடும்பத் தொழிலாக தொடர்பவர்,தலைப்பாகை செய்வதில் மேலும் கவனம் செலுத்தி விதவிதமாக இவர் உருவாக்கும் தலைப்பாகை பலரையும் கவர்ந்து வருகிறது.'டோக்ரா' வகை தலைப்பகை எனப்படும் இவ்வகை தலைப்பாகை செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் இவர் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார்.டோக்ரா பாரம்பரிய தலைப்பாகை, ஜம்முவின் உள்ளூர் மொழியில் 'சஃபா' அல்லது 'பக்ரி' என்றும் அழைக்கப்படுகிறது.பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் டோக்ரா தலைப்பாகை அணியப்படுகிறது.இது ஞானம், அறிவு மற்றும் தூய்மையை அடையாளப்படுத்துகிறது.பின், ராஜ்புத் சமூகத்தினர் மத மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு முன்னதாக இதனை அணிவார்கள். இது 'துர்ரா' எனப்படும் வலுவான மற்றும் நன்கு ஸ்டார்ச் செய்யப்பட்ட மடல் கொண்டது.இளஞ்சிவப்பு நிற தலைப்பாகை பெரும்பாலும் மணமகன் மற்றும் மணமகளின் தந்தைகளால் அணியப்படும்.திருமணத்திற்கு முந்தைய நாள் இதனை அணிவதை பெருமையாக கருதுவர் மற்ற ஆடைகளுடன் ஒப்பிடும்போது தலைப்பாகை ஒரு விலையுயர்ந்த பொருளாகும்.5- மீட்டர் அளவுள்ள சாதாரண துணியை வாங்கி, விரும்பிய வண்ணத்தில் சாயமிடுவார்கள். பின்னர் அது ஸ்டார்ச் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது.தலைப்பாகை கட்டுவது ஒரு கலை , அலங்கரிக்கப்பட்ட துணி ஒரு நபரின் தலையில் கலைநயத்துடன் கட்டப்பட்டு, பின்னர் உரியவரின் தலையில் வைக்கப்படுகிறது. விஐபி..க்களுக்கு முன்பு உபயோகித்த ஒரு தலைப்பாகையைக் கொண்டு தயாரிப்பர்.எல்லா பராம்பரியத்தையும் தொலைப்பது போல இன்றைய இளைஞர்கள் இந்த தலைப்பாகை கட்டுவதையும் தவிர்த்து வருகின்றனர்.அவர்களுக்கு இதில் எல்லாம் இப்போது ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை.திருமணத்தின் போது மட்டும் தவிர்க்கமுடியாமல் அணிந்து கொள்கின்றனர்.இப்போது பிரதமர் அணிவதால் இந்த டோக்ராகவிற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.பொதுவாக நமது பகுதியில் ஆண்கள் துண்டினைத் தலையில் கட்டிக்கொள்ளும் போது அது தலைப்பாகை எனப்படுகிறது. இது வேலையின் தீவிரத்தைக் காட்டும் குறியீடாகவும் உள்ளது.பாரதி தலைப்பாகை அணிவதை பெருமையாக கருதினர் அவரை முண்டாசுக்கவிஞர் என்றே இதனால் அழைக்கிறோம். இப்போதும் கோவிலில் பரிவட்டம் கட்டுதல் என்ற பெயரில் தலைப்பாகை கட்டப்படுவது அந்த நபருக்கு கிடைக்கும் உயர்ந்த மரியாதையாகக் கருதப்படுகிறது.தலைப்பாகை செய்வதை ஒரு கலையாகக் கையாண்டு வரும் மணீஷ் சிங்கிற்கு சமீபத்தில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் சிறந்த இளைஞர் என்ற மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது இந்த விருதினை வாங்கும் போது இவர் அணிந்திருந்த தலைப்பாகை இன்னும் சிறப்பாக இருந்தது.இவரது நிரந்தர வாடிக்கையாளர்களின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒருவர்.இப்போது பிரதமரும் இவரது வாடிக்கையாளராகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
மே 14, 2024 16:12

ஒரு தலைப்பாகைக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருப்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய தினமலருக்கு நன்றி , அதே நேரத்தில் எல்லா பிரியவினர்களும் அவரவர்களுக்கென்று ஒரு தலைப்பாகையைப் பின்பற்றி வந்தார்கள் அதில் முதலாவது இந்திய ராணுவத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராஜ்புத் :தலைக்கவசத்தைப் பயன்படுத்துவது ராஜஸ்தானில் அடிப்படையில் ராஜ்புத் போர்வீரர் குலம் சமூகத்தால் தொடங்கப்பட்டது, அவர்கள் அவற்றை அரச அடையாளமாக அணிவார்கள் இந்த வண்ணமயமான தலைப்பாகையின் மாறுபாடுகளைக் காணலாம் , ஏனெனில் இது அந்த நபரைச் சேர்ந்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமானது அடுத்து நம்மை ஆண்ட முகலாயர்கள் தலைப்பாகை : அவர்களின் பாரசீக மற்றும் அரபு பாரம்பரியத்தைச் சுற்றி பகட்டான, முகலாயர்களின் தலைப்பாகைகள் கூம்பு வடிவமாகவும் அகலமாகவும் இருந்தன, முன்பு இந்தியர்கள் அணிந்திருந்த சிறியவற்றைப் போலல்லாமல் முகலாயர்களின் மிகவும் சர்ச்சைக்குரிய பேரரசர்களில் ஒருவரான ஔரங்கசீப் இல் ஆட்சிக்கு வந்தபோது, ​​அந்த ஆடை மக்களைப் பிரிக்கும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது அதாவது ஒரு தலைப்பாகை மனிதனின் அடையாளம் மற்றும் இல்லாமல் மக்களிப்பிரிக்கும் கருவியாகவும் பயன்பட்டிருப்பது விந்தையாக இருக்கிறது தலைப்பாகைக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவொரு கதை இருக்கிறது சீக்கியர்களின் கலைப்பாகைக்கும் இதே போல் ஒரு கதை உள்ளது அதாவது , தலைப்பாகையுடன் தொடர்புடைய வர்க்க அமைப்பை அகற்றுவதற்காக, குரு கோவிந்த் சிங் ஒவ்வொரு சீக்கியரையும் ஒரு சர்தார் என்று அறிவித்தார் நவீன சீக்கிய ஆண்கள் முக்கியமாக நான்கு வகையான தலைப்பாகைகளை அணிகின்றனர்: வட்டன் வாலி தலைப்பாகை, அமிர்தசரஸ் ஷாஹி தலைப்பாகை, பர்னாலா ஷாஹி மற்றும் தக்சலி துமாலாஎன்று அழைக்கப்படுகிறது முடிவாக நமது விவசாயிகளின் தலைப்பாகை ஒரு அழகு, உலகமெங்கும் ஒரு தலைப்பாகை ஒரு மீசை வரைந்தால் அது நமது கவிஞர் பாரதியார் ஒரு கலைப்பாகைக்குப் பின்னால் இருக்கும் கதையை அழகாக சுருக்கமாக விளக்கிய தினமலருக்கு பாராட்டுக்கள் வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை