மேலும் செய்திகள்
நல்லிணக்கம் மலர வழிவகுக்கும் யோகா
21-Jun-2026
சேவையே என் வாழ்க்கை!
14-Jun-2026
உலக கோப்பை கனவை நெஞ்சில் சுமந்து...
14-Jun-2026 | 1
கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி
07-Jun-2026 | 1
'நாக்க முக்க' பாடலுக்கு நடன இயக்கம் செய்து, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பலரையும் ஆட வைத்து அதிர வைத்தவர் நடன இயக்குனர் ஸ்ரீதர். இவர் சமீபத்தில் பழங்கால நடன மாஸ்டர்களை கவுரவித்தது சினிமா, நடன ரசிகர்களின் பாராட்டை பெற்றது.சென்னையை சேர்ந்த இவர் பி.காம். படிப்பை பாதியில் விட்டு விட்டு சினிமா வந்தார். 2001 முதல் பல்வேறு படங்களில் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து 2006ல் கே.பாலச்சந்தர் இயக்கிய 'பொய்' திரைப்படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார்.அவர் கூறியதாவது; சினிமாவின் பழங்கால நடன குருக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தினேன். 1938ல் சினிமாவுக்குள் நடனம் எப்படி நுழைந்தது, அதில் இருந்து யார் யார் பெரிய டான்ஸ் மாஸ்டர்கள், அதற்கு பின் 1980 காலகட்டங்களில் நடன இயக்கம் எப்படி இருந்தது என்ற கேள்விகளை தேடி ஓடினேன். அதன் விடையாக பல கவனிக்கப்படாத நடன இயக்குனர்களை என்னால் காண முடிந்தது.புதிய தலைமுறை பலருக்கு, முந்தைய தலைமுறை மாஸ்டர்களை தெரியவில்லை. தமிழ் சினிமா துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை 180 நடன மாஸ்டர்கள் உள்ளதை கண்டுபிடித்தேன். இவர்களை பற்றி வெளியே கூறவில்லை என்றால் இன்னும் நுாற்றாண்டு கழித்து இப்போது சிறந்து விளங்கும் யாரும் கூட தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே நான் அவர்களை ஆவணப்படுத்த விரும்பினேன். அவர்களை அழைத்து கவுரவ விருது வழங்கினேன்.
21-Jun-2026
14-Jun-2026
14-Jun-2026 | 1
07-Jun-2026 | 1