முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
தனுசு: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
மூலம்: சப்தம குருவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.
பூராடம்: ஐந்தாமிட சுக்கிரன் வசதி வாய்ப்பை அதிகரிப்பார், சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள், உறவுகளுடன் ஏற்பட்ட பகை விலகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

























