உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் உறுதி

மக்களுக்கு ஒருமுறை இயேசு போதனை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த தலைமைகுருவும், அவரைச் சேர்ந்தவர்களும், “போதிக்கும் அதிகாரத்தை உமக்கு வழங்கியது யார்?” எனக் கேட்டனர். ''நானும் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் பதில் அளித்தால் நானும் பதில் கூறுவேன்” என்றார். இயேசுவுக்கு முன்னதாக மக்களுக்கு போதனை செய்து வந்தார் யோவான். இதை பொறுக்க முடியாமல் குருமார்கள் எதிர்த்தனர். அதே நிலையில் தானும் இருப்பதை உணர்ந்த இயேசு அவர்களுக்கு யோவானை நினைவுபடுத்தும் விதத்தில், “போதிக்கும் அதிகாரம் யோவானுக்கு எங்கிருந்து வந்தது. விண்ணில் இருந்தா? அல்லது மனிதர்களிடம் இருந்தா?” எனக் கேட்டார் இயேசு. அவர்கள் விண்ணில் இருந்து வந்தது என்று பதில் சொன்னால், ''ஏன் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை'' என இயேசு கேட்பார். மனிதர்களிடமிருந்து எனக் கூறினால் அங்கு கூடியிருக்கும் மக்கள் வெகுண்டெழுவார்கள். ஏனெனில் அந்த மக்கள் அனைவரும் யோவானை 'இறைவாக்கினர்' என ஏற்றுக் கொண்டுள்ளனர். எந்த பதிலைச் சொன்னாலும் அது தங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை உணர்ந்த குருமார்கள் அமைதியாயினர். உறுதியான உள்ளம், கர்வமில்லாத நடத்தை, பணிவான பேச்சு ஆகிய நற்பண்புகள் மனிதனை உயர்த்தும்.