உள்ளூர் செய்திகள்

நான் இருக்கிறேன்

ஒரு சிறுமியும் அவளது தந்தையும் குறுகிய பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தனர். கீழே இருந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ''அப்பா. உங்கள் கையை பிடித்துக் கொள்ளவா? பயமாக இருக்கிறது'' என்றாள் சிறுமி. ''மகளே! நீ என் கையை பிடிக்க வேண்டாம். உன் கையை நான் பிடித்துக் கொள்கிறேன்'' என்றார். சிறிது நேரம் அவரது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் சிறுமி. ''என்ன பார்க்கிறாய். நீ குழந்தை. சிக்கலான நேரத்தில் எப்படி நடந்து கொள்வது என உனக்குத் தெரியாது. பயத்தில் உன் பிடி தவறக்கூட வாய்ப்புள்ளது. அதனால்தான் அப்படி சொன்னேன். இப்போது மட்டுமல்ல. வாழ்க்கையில் எப்போது பயம் வந்தாலும் என் கையை பிடித்துக்கொள். நான் இருக்கிறேன்'' என்றார். இதைக்கேட்டதும் அவளுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.