புத்தியை பயன்படுத்துங்கள்
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
இரண்டு இளைஞர்கள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது, சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் சத்தம் கேட்டது. ''இன்று நாம் சிங்கத்திற்கு உணவாக போகிறோம்'' என்றான் முதலாமவன். ''பைத்தியமா... நீ.. வேகமாக மரத்தின் மீது ஏறு'' என்றான் இரண்டாமவன். பார்த்தீர்களா... முதலாமவன் புத்தியை பயன்படுத்தவில்லை. இரண்டாமவன் அறிவுள்ளவன். இப்படித்தான் நம்மில் பலரும் புத்தியை பயன்படுத்துவதில்லை. நமது அறிவை சரியாக பயன்படுத்தினாலே போதும்... எந்தவொரு பிரச்னையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.