உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கிஷோர்.சா, சக்குர்பூர், டில்லி: என் தாயார் என்னுடன் நிரந்தரமாக வசிக்க வழியுண்டா...என்னுடன் இருங்க' என நீங்களும், மனைவியும் அன்பாக அவரிடம் சொல்லுங்கள். எந்த சூழலிலும் அவரை விட்டுக் கொடுக்காதீர். எப்போதும் உங்களுடனே இருப்பார். மீனாட்சி.சொ, மேலுார், மதுரை: குடும்ப அமைதிக்கு யாரை வழிபடலாம்?திருத்தணி முருகனை வழிபடுங்கள். வெள்ளிதோறும் மவுன விரதம் இருங்கள். ஆனந்தி.யு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: சஷ்டி அப்த பூர்த்தி (60 வயது) அன்று கனகாபிஷேகம் (தங்க நாணயத்தால் அபிஷேகம்) செய்யலாமா?பிள்ளைகள் விரும்பினால் செய்யலாம்.யுவஸ்ரீ.எம், மாடப்பாக்கம், சென்னை: திருமணத்தில் தடையும், தாமதமும் ஏன்பெற்றோர் சொல்வதை பிள்ளைகள் ஏற்காததே காரணம். இளைஞர்கள் சம்பாதிக்கிறார்கள். யோசிக்கிறார்கள். ஆனால் முடிவெடுக்க தயங்குகிறார்கள். விக்னேஷ்வரி.கே, தாடிக்கொம்பு, திண்டுக்கல்: திருமணத்தில் சடங்குகள் குறைகிறதே...ஆடம்பர விஷயங்கள் அதிகரிப்பதே இதற்கு காரணம். மாரி.பி, மானுார், திருநெல்வேலி: என் தந்தை கட்டிய முருகன் கோயிலில் சொற்பொழிவாற்ற ஆசை. என்ன செய்ய...முருகப்பெருமான், பெற்றோரை வணங்கி இன்றே தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.குமரன்.எம், தாராபுரம்,திருப்பூர்: சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்க…அன்பு, எளிமை, கருணை, பொறுமை தேவை.முருகன்.எஸ், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: சொத்து வழக்கில் தீர்வு கிடைக்க...செவ்வாய் தோறும் விநாயகரை வழிபடுங்கள். ராஜன்.இரா,திருநள்ளாறு, புதுச்சேரி: புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு என்ன சிறப்பு?புரட்டாசியில் சனிக்கிழமையும், திருவோணமும் சேர்ந்த நாளில் தான் ஏழுமலையான் அவதரித்தார்.