உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

  ராஜி.எம், வண்டலுார், செங்கல்பட்டு: தீபாவளி என்றால்...வரிசையாக விளக்கு ஏற்றுவது. குமார்.எம், தக்கலை, கன்னியாகுமரி: *தீபாவளி கொண்டாட்டம் ஏன்?1) வனவாசம் முடிந்து சீதையும், ராமரும் அயோத்திக்கு திரும்பிய நாள். 2) பகவான் கிருஷ்ணர் அசுரனான நரகாசுரனை வதம் செய்த நாள்.ராஜன்.எஸ் பழநி, திண்டுக்கல்: *தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?புனித நதிகளான கங்கை, காவிரியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். கவிதா.கே, திருநின்றவூர், திருவள்ளூர்: *தீபாவளிக்கு புதிய ஆடை அணிவது ஏன்?நரகாசுரனின் இறப்பை புதிய ஆடையுடன் எல்லோரும் கொண்டாட வேண்டும் என, கிருஷ்ணரிடம் அவனது தாய் சத்தியபாமா வரம் பெற்றாள். ரவி.பி, சிதம்பரம், கடலுார்: *தீபாவளி அன்று சுமங்கலிகள் விரதம் இருப்பது ஏன்?தம்பதி ஒற்றுமைக்காக... (கேதார கவுரி விரதம்) ராதிகா.பா, எழுமலை, மதுரை: *நரகாசுரனைக் கொன்ற நாளில் தீபம் ஏற்றலாமா...அசுரன் என்னும் இருள் மறைந்து, எங்கும் ஒளி பரவியதால் தீபம் ஏற்றுகிறோம்.காந்திமதி.சி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: *பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்படி வந்தது?உல்காமுகம் என்ற தீப்பந்தத்தை வெடிக்கச் செய்யும் வழக்கம் முன்பு இருந்தது. அதுவே இப்போது பட்டாசு. வினோத்.ஷி, பெங்களூரு: *பெயரில் தீபத்தை கொண்ட கடவுள் இருக்கிறாரா......காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அவரது பெயர் விளக்கொளி பெருமாள். யாழினி,கு, கருமத்தம்பட்டி, கோயம்புத்துார்: *தீபாவளி அன்று சிலர் லேகியம் சாப்பிடுகிறார்களே...அதிக பலகாரம் சாப்பிடுவதால் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம் கலந்த லேகியத்தை சாப்பிடுகிறோம். இது செரிமானத்தை சீராக்கும்.