கேளுங்க சொல்கிறோம்
ஆதிரா.எம்,கல்யாண்புரி, டில்லி: *கார்த்திகை அஷ்டமியின் சிறப்பு...சிவனின் 64 வடிவங்களில் ஒருவர் பைரவர். அவர் அவதரித்த நாள் இது.திவ்யா.ஆர், திருமங்கலம், மதுரை: *எந்த தெய்வத்திற்கு வடை மாலை சாற்றலாம்?பைரவர், ஹனுமன், சரபேஸ்வரர், துர்கைரவி.கு, முருங்கப்பாக்கம், புதுச்சேரி: *சத்ரு சம்ஹார யாகம் ஏன் நடத்துகிறார்கள்?எதிரி தொல்லை தீர தேய்பிறை அஷ்டமி அன்று யாகம் நடத்துகின்றனர்.பூர்வீகா.ஏ, திருநின்றவூர், திருவள்ளூர்: *தினமும் பைரவருக்கு என்ன ஸ்லோகம் சொல்லலாம்? அதிக்ரூர மஹாபாக கல்பாந்த தஹனோபம!!பைரவாய நமஸ்துப்யம்ரக்ஷமாம் சரணாகதம்!!சுந்தரம்.கே, நாகர்கோவில், கன்னியாகுமரி: *பைரவருக்கு எந்த நிற வஸ்திரம் சாத்தலாம்? ஏன்?சிவப்பு நிற வஸ்திரம். இதனால் திருஷ்டி, கடன், நோய், எதிரி தொல்லை தீரும். முருகன்.எஸ், பழநி, திண்டுக்கல்: *சிறப்பு மிக்க பைரவத் தலங்களைச் சொல்லுங்கள். திருபுவனம்(தஞ்சாவூர்) சரபேஸ்வரர், சீர்காழி(மயிலாடுதுறை), திருமயம்(புதுக்கோட்டை), வயிரவன்பட்டி(சிவகங்கை). மோகன்.ரா, வல்லநாடு, துாத்துக்குடி: *ஸ்ரீதர ஐயாவாள் யார்?தஞ்சை மாவட்டம் திருவிசைநல்லுாரை சேர்ந்தவர் இவர். கார்த்திகை அமாவாசை அன்று இவருடைய வீட்டுக் கிணற்றில் கங்கை பொங்கும். பாவம் தீர பக்தர்கள் நீராடுகின்றனர். தேவதர்ஷினி.கே, ஊட்டி, நீலகிரி: *திங்கள் அன்று சிவபெருமானுக்கு விரதம் இருந்தால்...மனவலிமை, திருமணம், தம்பதி ஒற்றுமை, பணம் சேரும்.ச.மீனா, தாம்பரம், சென்னை: *கருமாரி, பத்ரகாளி அம்மனுக்கு சங்காபிஷேகம் உண்டா...எல்லா தெய்வங்களுக்கும் சங்காபிஷேகம் உண்டு.