கேளுங்க சொல்கிறோம்!
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீட்டில் தெளிக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?கே.கே.வெங்கடேசன். செங்கல்பட்டு.தினமும் பசுஞ்சாணத்தினால் வீட்டை மெழுகுதல் அக்காலத்தில் மரபு. சாஸ்திர ரீதியாக எல்லா வகையான தீட்டுகள், தோஷங்களைப் போக்கி செல்வவளம் பெருகச்செய்யும். விஞ்ஞான ரீதியாக சிறந்த கிருமிநாசினியாகவும், நோய்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் உடையதாகவும் கோமியம் போற்றப்படுகிறது. இன்றைய நடைமுறையில் இது இயலாத ஒன்றாகி விட்டதால் செவ்வாய், வெள்ளிகளில் வீட்டில் கோமியம் தெளிப்பதாவது சிறந்த பலனளிக்கட்டும்.** எல்லா தவறும் செய்கிறார்கள், கடவுளையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு கடவுள் அருள்புரிவாரா?உ.ச.சபாநாயகம். சிதம்பரம்.அறியாமல் தவறு செய்பவர்களை கடவுள் தாமாகவே மன்னிப்பார். அறிந்தே தவறு செய்பவர்கள், அவரை வணங்கினாலும் தண்டனை தராமல் விடமாட்டார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவன் முன் ஒன்று தான்.* வீட்டில் மரம் வளர்ப்பது குறித்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?ஏ.பட்சிராஜன், கோடம்பாக்கம்.தென்னை, மா, பலா, வாழை போன்ற மரங்களையும் பூஜைக்கு உகந்த மலர்ச்செடிகளையும், காய்கனிகளையும் வீட்டில் வளர்க்கலாம். எருக்கு, அரசு, ஆல், கருவேலம் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.கருப்புக் கயிறை எந்தக்கையில் எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்? விஜயலட்சுமி, மதுரை. கருப்புக்கயிறை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். கண்திருஷ்டி, நோய், செய்வினை தோஷம் நீங்கவே பெரும்பாலும் மந்திரித்துக் கயிறு கட்டப்படுகிறது. என்ன பிரச்னைக்காக கயிறு கட்டுகிறோமோ, அது நீங்கும் வரை கயிறு கையில் இருப்பது நல்லது. சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலர்களை தலையில் வைத்துக் கொள்ளலாமா?ச.தேவிகா, சிதம்பரம்.பிரசாதமாக வழங்கப்படும் பூச்சரங்களை தாராளமாக தலையில் சூட்டிக்கொள்ளலாம். மாலைகளை வீட்டு நிலை அல்லது முன்னோர் படங்களுக்கு அணிவிக்கலாம். வாகனங்களுக்கு போட்டு சாலைகளில் சிதறி கால்களில் மிதிபடுவதையும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதையும் தவிர்த்தால் போதும். * மலைக்கோவிலுக்குச் செல்லும் போது செருப்புக்காலுடன் செல்லலாமா?ஆர்.மீனா அகிலா, போத்தனூர். கோவில் இருக்கும் மலைகளும் தெய்வமாகவே கருதப்படுவதால் தான் கிரிவலம் போன்ற வழிபாடுகள் பக்தர்களால் செய்யப்படுகின்றன. எனவே செருப்பணிந்து மலையேறுவது, கிரிவலம் வருவது தவறு.