உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்பதன் பொருள் என்ன?என்.ஜே.கீர்த்தி திருப்பூர்.உலகில் நிகழும் இன்ப, துன்பம் எல்லாமே இறைவன் செயல் என்பதை உணர்த்தும் உயர்ந்த தத்துவம் இது. இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி கூறாதவர்கள், துன்பம் வந்தால் இப்படி சோதிக்கிறாரே..... என புலம்புவர். கஷ்டமோ நன்மையோ இரண்டையும் அவரிடமே அர்ப்பணித்து விட்டால் மனம் பக்குவப்பட்டு விடும். கவலையில்லாமல் வாழும் உயர்நிலையை அடையலாம்.பெண்கள் பூசணிக்காயை வெட்டக்கூடாது என்பதற்கு காரணம் உண்டா?ஆர்.நிரஞ்சனா. கூடுவாஞ்சேரி.முழுக்காயாகத்தான் வெட்டக்கூடாது. ஆண்கள் அதை கீற்றாக வெட்டி தந்த பிறகு சமைப்பதற்காக துண்டாக்கிக் கொள்ளலாம். தேங்காய் உடைத்தல், செடி, கொடி, மரங்கள் வெட்டுவதையும் ஆண்களே செய்ய வேண்டும். மென்மை மனம் படைத்த பெண்கள் இவற்றை செய்தால் நோய், நிம்மதியின்மை ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.இரட்டை வாழைப்பழம் சாப்பிடக்கூடாதாமே.... உண்மையா?ப.செல்வன் காஞ்சிபுரம்.ஆம். இரட்டை வாழைப்பழம், முளைவந்த தேங்காய் இவற்றை சாப்பிடக்கூடாது. இயற்கைக்கு விரோதமானவற்றை சாஸ்திரங்கள் வேண்டாம் என்கின்றன.பெயருக்கு முன் 'ஸ்ரீ' சேர்த்து எழுதுவது ஏன்?கே.திருநாவுக்கரசு.நெய்வேலி.'ஸ்ரீ' என்றால் லட்சுமி. தமிழில் 'திரு' என்பர். அழகு, செல்வம், மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே இந்த அடைமொழியைச் சேர்க்கின்றனர். ** சுபநிகழ்ச்சிகளில் பெண்கள் குலவையிடுவது ஏன்?என்.முருகேசன். திருத்தங்கல்.தெய்வத்தை அழைக்கும் ஆற்றல் மந்திரங்களுக்கு இருப்பது போல, குலவைச் சத்தத்திற்கும் உண்டு. இது மங்களகரமானது. குலவை சத்தம் யார் காதில் எல்லாம் விழுகிறதோ, அவர்களது வீட்டில் மங்கள நிகழ்வு நடக்கும்.நீண்டகால நோய் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?என்.ராஜேஸ்வரன், கடலூர்.வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமியை நோய்தீர வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையன்று உடல்நிலைக்கு தக்க விரதம் இருங்கள். முறையான வைத்தியமும் செய்து கொண்டு, திருநாவுக்கரசர் பாடியுள்ள ''பேராயிரம் பரவி'' எனத் துவங்கும் திருத்தாண்டகத்தை படியுங்கள். நோய் பறந்தோடும்.வீட்டில் கற்றாழை வளர்த்தால் கண்திருஷ்டி நீங்குமா?ஆர்.செல்வி.மதுரை.கண் திருஷ்டி நீங்க கள்ளிச்செடி கட்டினால் போதும். சோற்றுக்கற்றாழை வளர்த்தால் ஒரு மருத்துவரே உங்கள் வீட்டில் இருப்பது போலாகும். அவ்வளவு மருத்துவ குணங்கள் அதற்கு உண்டு.* கோவிலில் தூங்கினால் மலைப்பாம்பாக பிறப்பார்கள் என்பது ஏன்?கே.சுரேஷ், போத்தனூர்.சர்வவல்லமை பொருந்திய கடவுள் குடியிருக்கும் இடம் கோவில். வேண்டிக் கொள்வதையெல்லாம் வரமாக அருளும் இடம். இங்கு சாப்பிடுவது, தூங்குவது, தேவையற்ற விஷயங்களைப் பேசுவதால் புண்ணியம் குறையும்.