உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* மணமக்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்வது ஏன்? எம்.செந்தில்குமரன், சென்னை.பெற்று வளர்த்து நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர, பிள்ளைகளிடம் எந்த பிரதிபலனும் பெற்றோர் எதிர் பார்ப்பதில்லை. எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என அவர்களை கடவுளுக்கும் மேலாக முதன்மைப்படுத்தினர். இவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனே பாதபூஜை.சிவனுக்கு உகந்த கிழமை திங்களா... வெள்ளியா?ஆர்.பிரபு, கோவை.திங்கள். இதற்கு சோமவாரம் என்று பெயர். உமையுடன் கூடியவர் என்பதாலும், சந்திரனை தலையில் தாங்கியவர் என்பதாலும், சிவனுக்கு சோமன் என்று பெயர் வந்தது. இவரது பெயரிலேயே திங்கள் கிழமையை சோம வாரம் என்பர்.கண் திருஷ்டியிலிருந்து தப்ப என்ன செய்யலாம்?சி.பழனிச்சாமி, கிழக்குத்தாம்பரம்.எந்தவிதத்திலும் மிகைப்படுத்தி கொள்ளாமலும், பொது இடத்தில் நம்மையோ, குடும்பம் பற்றியோ பெருமை பேசாமல் இருப்பது முதல் பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் சாம்பிராணி போடலாம். தேங்காயில் சூடம் கொளுத்தி சுற்றி உடைக்கலாம்.** பெற்றோருக்காக பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?என்.பி.லட்சுமி, மதுரை.பிதுர் காரியங்களில் பெண்கள் தனியாக சடங்கு செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. திருமணமான பின், மாமனாரும் மாமியாரும் பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளதால், விரதம் கூடாது. அவர்கள் இல்லாத பட்சத்தில் கணவனுடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். அப்போது உங்கள் பெற்றோரை மனதில் நினைத்துக் கொள்ளலாம்.தெய்வங்களுக்கு வாகனம் வெவ்வேறானதாக இருப்பது ஏன்?எஸ்.கணபதி, வளவனுார்.சோதனைகளை சந்திக்கும்போது போராடி வெற்றி பெற, தெய்வத்தின் துணை அவசியம். ஒரு தெய்வத்தின் வரலாறு தெரியாமல் அவரை வணங்கி பயனில்லை. எனவே புலவர்கள் தெய்வ வரலாறுகளை எழுதினர். அப்போது வெவ்வேறு வாகனங்களை அவர்களுக்காக படைத்தனர்.கிரகப்பிரவேசத்தன்று செய்ய வேண்டிய ஹோமங்கள் என்ன?கே.புஷ்பா, கடலூர்.புது வீட்டில் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வாஸ்துசாந்தி பூஜையும், தெய்வத்தின் திருவருளுடன் சகல நலன்களுடன் வாழ கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமங்களும் செய்ய வேண்டும்.* தெப்ப திருவிழா நடத்துவது ஏன்?ஏ.ஆர்.ரங்கநாயகி, ராமநாதபுரம்.திருவிழா காலத்தில் உற்சவர் தினமும் வாகனத்தில் வெளியே வருகிறார். தினமும் இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கும் என்றால், விழா காலத்தில் இரவு 1:00 மணி வரை கூட ஆகி விடும். இப்படி நேரம் காலம் பாராமல், நமக்காக வெளியே வந்த இறைவனை குளிர்ச்சிப்படுத்த, தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது.கொடிமரம் முன்பு எந்த திசைநோக்கி விழுந்து வணங்க வேண்டும்?என்.ஜெயன், திருப்பூர்.கோவில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியிருந்தால் வடக்கு முகமாகவும், வடக்கு நோக்கியிருந்தால் கிழக்கு முகமாகவும் வணங்க வேண்டும்.