உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

வீட்டில் தினமும் எவ்வளவு நேரம் விளக்கு எரிய வேண்டும்?பி.கவிதா, கோவை எவ்வளவு நேரம் என்பது முக்கியம்இல்லை. சூரியன் காலையில் உதிக்கும் போதும், மாலையில் மறையும் போதும் விளக்கேற்ற வேண்டும். * தெய்வத்தையே குருவாக ஏற்று வணங்கலாமா? ஏ.கல்யாணராமன், கள்ளக்குறிச்சி. தாய் காட்டியதால் தந்தையை அறிந்தோம். தந்தை காட்டிய பின் குருவை அறிந்தோம். குரு காட்டிய வழியில் தெய்வத்தை அறிந்தோம். குருவை வழிபடாவிட்டால் பலன் கிடைக்காது. தெய்வமே குரு வடிவில் வந்து தான் நல்லறிவை அருளும். இரவில் வீட்டிலுள்ள குப்பைகளை வெளியேற்றலாமா? எஸ்.கிரிஜா, புதுச்சேரி விளக்கு ஏற்றிய பின் வீட்டை பெருக்குவது, குப்பையை வெளியேற்றுவது கூடாது. விளக்கேற்றும் முன் செய்ய வேண்டியதை பின்னால் செய்தால் செல்வம் குறையும்.விஷ்வக்ஸேனர் என்பவர் யார்? பா.திலகப்ரியா, கணபதி விஷ்ணுவிற்கு பிரியமான சேனை நாயகர் என்பதால் இப்பெயர் பெற்றார். விஸ்வ-முழுமையான, ஸேனர்- படைத்தலைவர் என்பது பொருள். இலக்கணப்படி இச்சொற்கள் இணைந்து 'விஷ்வக்ஸேனர்' என்றானது. வைணவ குருபரம்பரையில் மூன்றாவது குருநாதராக போற்றப்படுகிறார். யானை முகம் கொண்டவர் என்பது இவரது சிறப்பு. வடமாநிலங்களில் முருகன் கோவில் அதிகமில்லையே... ஏன்? ஏ.ஆர். ஜம்புலிங்கம், ஆதனூர் காஞ்சிகார்த்திக்ஜி, தண்டபாணி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறார். வட மாநிலங்களில் சைவ, வைணவ பேதம் கிடையாது. அங்கு சிவன், ராமர், கிருஷ்ணர் பிரசித்தமாக இருப்பதால் மற்ற தெய்வ வழிபாடு அதிகமில்லை. கனவில் அடிக்கடி யானை துரத்துகிறது. இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள். எம்.ஆர்.வெங்கடேசன், பரமக்குடிகனவு நமது ஆழ்மனதில் பதிந்துள்ள விஷயங்களின் வெளிப்பாடு. இதற்கான பரிகாரம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இவை மனோதத்துவ ரீதியாக மனதை பலப்படுத்தும் என்பதால் வழக்கிலும் உள்ளது. பிள்ளையாருக்கு நேர்த்திக்கடன் செய்யாமல் இருந்தால் அதை நிறைவேற்றுங்கள். தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.** அர்ச்சனை செய்த பின் அவசரம் என்பதால் கோவிலை சுற்றாமல் புறப்படலாமா? எஸ்.அன்புக்கரசி, காரைக்குடிஉண்மை பக்தி இருந்தால் இது போன்ற விஷயம் தவறாகாது. 'யதாசக்தி' என்னும் சொல் வழக்கில் உண்டு. 'சக்திக்கு தகுந்தாற் போல' என்பது இதன் பொருள். இயன்ற வரை எந்த செயலையும் நன்றாக செய்ய வேண்டும். * முன்வினை பயனால் தான் வாழ்வில் துன்பம் உண்டாகிறது. இதில் தப்ப என்ன வழி?பொன். எத்திராஜன், திருக்கழுக்குன்றம்'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிறது தமிழ் இலக்கியம். துன்பம் மட்டுமில்லாமல் இன்பத்திற்கும் முற்பிறவிச் செயலே காரணம். இதை உணர்ந்தவர்கள் விருப்பு, வெறுப்பின்றி செயல்படுவர். மனத்தூய்மை மிக்க இவர்களைப் பாவ, புண்ணியம் சேராது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வின் இறுதியில் கடவுளின் திருவடியைச் சென்றடைவர்.