உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* அர்ச்சனைத் தேங்காய் அழுகியிருந்தால் பரிகாரம் இருக்கிறதா?டி.அங்கயற்கண்ணி, பள்ளிக்கரணைகடையில் வாங்கும் போதே இதை கவனித்தால் தவிர்க்கலாம். அர்ச்சனையின் போது தெரிந்தால் மனம் சங்கடப்படும். புதிய தேங்காய் உடைத்து வழிபட்டால் போதும். தவறுக்கு சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டால் மனம் அமைதியாகி விடும்.* கடைசியாக விநாயகரை கும்பிட்டால், கோவிலில் வழிபட்ட புண்ணிய பலனை பெற்றுக் கொள்வார் என்பது உண்மையா?சா.உண்ணாமுலை, மதுரைதெய்வத்தால் பலன் கிடைக்குமே தவிர, பலன் நீங்குவதில்லை. கொடிமரத்தடியில் உள்ள விநாயகரிடம் தொடங்கி, மீண்டும் அங்கு வந்து சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் வழிபாட்டை முடிப்பது தான் வழக்கம்.திருநீறு பூசும் முறை பற்றி விளக்குங்கள்.ச.வள்ளி, நெய்வேலிகுருவிடம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் திருநீறைத் தண்ணீரில் குழைத்து நெற்றி, இரு தோள்கள், மார்பு, வயிறு எனும் ஐந்து இடங்களில் பூசுவர். பொதுவாக நமசிவாய மந்திரம் சொல்லி நெற்றியில் பூசுவது நல்லது.கொடிமரம் இல்லாத கோவிலில் எந்த இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும்?ஏ.நாகராஜன், பம்மல்.கோவிலின் பெரிய பிரகாரம் சுற்றி வந்து, முடியும் சன்னதிக்கு நேர் இடமே நமஸ்காரம் செய்ய வேண்டிய இடம்.** என் பேத்திக்கு முடியிறக்குவதாக நேர்ந்து கொண்டேன். அவள் பெரியவளாகி விட்டதால் நிறைவேற்ற முடியவில்லை. பரிகாரம் உண்டா?வி.கற்பகவல்லி, மேட்டுப்பாளையம்.குழந்தை பெரியவளாகும் வரை முடியிறக்காமல் இருந்திருக்க வேண்டாம்.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் முடியிறக்கி வழிபடுவது குடும்பத்திற்கே பலன் தருவதாகும். இதில் அலட்சியம் கூடாது. இனி கூந்தலின் நுனியில் பூ முடித்து அதை மட்டும் கத்தரித்து, பூ முடியிறக்குதலைச் செய்வது தான் பரிகாரம்.கோவில் சுவரில் சுண்ணாம்பு, காவியடிப்பது ஏன்?ஜி.ரகுநாதன், ஊரப்பாக்கம்இறைவன் இருக்கும் இடம் என்பதை காவி நிறமும், வழிபடுவோருக்கு அருள், அமைதியும் கிடைக்கும் என்பதை வெண்மை நிறமும் தெரிவிக்கின்றன.கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது என்பது உண்மையா?எம்.கிருபானந்தன், புதுச்சேரி.கருவுற்ற பெண்கள் தவிர மற்றவர் வெளியே வரலாம். ஆறு, குளங்களில் நீராடி முன்னோர் கடன் செய்து கோவிலில் வழிபடலாம். கிரகணத்தின் போது. கோவிலில் சிறப்புபூஜை செய்து புண்ணிய கால தீர்த்தம் கொடுப்பர்.