உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* பூஜையறையில் சுவாமி சிலைகளை வைத்து, வழிபடலாமா?சி.சசிகலா, சென்னைசிலைகளை வைத்து வழிபட்டால் பூ சாத்தி, சிறிதளவு அன்னம் நைவேத்யம் செய்ய வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்யலாம்.தினமும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மையை மனதார நினைத்தால் முக்தி கிடைக்குமா?எஸ்.நெல்லையப்பன், ராஜபாளையம்.'ஸ்மரணாத் அருணாசலம்'. அதாவது அண்ணாமலையை நினைக்க முக்தி என்பர். அண்ணாமலையாரை வழிபடுவோருக்கு முக்தி கிடைக்கும்.** தற்பெருமை அகல வழிபாடு இருந்தால் சொல்லுங்கள்.பானு, நெய்வேலிஎல்லாம் இறைவன் செயல், நம்மால் ஆவது ஒன்றுமில்லை என்ற எண்ணத்துடன் பைரவரை வழிபடுங்கள். தீயகுணங்கள் அகன்று விடும்.கணவர் இறந்த பின், அவர் அணிந்த ருத்ராட்சத்தை மனைவி அணியலாமா?சி.ஆண்டாள், சென்னை.தாராளமாக அணியலாம். பெரியவர்களிடம் உபதேசம் பெற்ற பின் பெண்கள் ருத்ராட்சம் அணிய வேண்டும். வீட்டு விலக்கு காலம் வரும் போது கழற்றி விட வேண்டும்.* ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதன் பொருள் என்ன?அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்.காலையில் குளிப்பது, ஆடை உடுத்துவது, திருநீறு அல்லது திருமண்(நாமம்) அணிவது, வழிபாடு செய்வது ஆகியவற்றை செய்யும் முறையில் சுத்தமாக தீட்டு (பிறப்பு, இறப்பு, மாதவிலக்கு) கலக்காமல் பார்த்துக் கொள்வது ஆச்சாரம். இவற்றை சாஸ்திரப்படி முறையாகச் செய்வது அனுஷ்டானம்.காகத்தின் வடிவில் முன்னோர் வருவது உண்மையா?எஸ்.சொக்கலிங்கம், திருச்சழி.பிதுர் (முன்னோர்) காரியம் முடிந்ததும், காகத்திற்கு அன்னம் வைக்க வேண்டும். அதாவது முன்னோர் வடிவாக காகங்களை கருத வேண்டும் என்பது இதன் பொருள். இதனால் முன்னோர் திருப்திஅடைந்து நம் சந்ததி தழைக்க ஆசியளிப்பர்.