உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஆர்.வித்யா, சென்னை* கங்கை, காவிரி என சில நதிகளை மட்டும் புனிதமாக கருதுவது ஏன்?கங்கை, காவிரி நதிகளுக்கு வரலாறு உண்டு. அதன் கரையோரங்களில் திருத்தலங்கள் உள்ளன. எல்லா நதிகளும் புனிதமானவையே. அதனால் அவற்றின் துாய்மையை காப்பது நம் கடமை.டி.மதுமதி, கோவை* சுவாமியின் திருநாமங்களை தீட்டுக் காலத்தில் ஜபிக்கலாமா?சுவாமியின் திருநாமங்களை எந்த நேரத்திலும் ஜபிக்கலாம். குருநாதரிடம் உபதேசம் பெற்ற மந்திரங்களை மட்டும் தீட்டுக் காலத்தில் ஜபிக்க கூடாது.எல். வரலட்சுமி, புதுச்சேரி* முருகனுக்கு அரோகரா என்கிறார்களே....ஏன்? 'ஹர ஹர' என்பதே 'அரோகரா' என்றானது. 'ஹர' என்றால் 'போக்குதல்'. 'துன்பம், பாவங்களை போக்கியருள வேண்டும் முருகா' என்பதே இதன் நோக்கம்.ஆர்.அனுராதா, பெங்களூரு* குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்ன செய்யலாம்துாங்கச் செல்வதற்கு முன் பக்தி, நீதிக் கதைகளைச் சொல்லுங்கள். படிப்பில் சிறக்க புதன்கிழமைகளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். எம்.சந்திரன், திருநெல்வேலி* கோயிலில் இரவில் ஹோமம் நடத்தலாமா? கும்பாபிஷேகத்தின் போது மட்டும் மாலை நேரத்தில் தொடங்கி இரவில் ஹோமத்தை முடிக்கலாம். இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கவில்லை.என்.ராஜேஸ்வரி, சிதம்பரம்* நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் சிரமப்படுகிறேன். பரிகாரம் சொல்லுங்கள்.மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள். செவ்வாயன்று விரதம் இருப்பது நல்லது. மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோடு 'பேராயிரம் பரவி' எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை தினமும் பாடுவது நல்லது. என்.வினோதா, நாகர்கோவில்* தாலி கட்டும் போது பெண்கள் குலவையிடுகிறார்களே...குலவைச் சத்தமும் மந்திரத்திற்கு ஈடானது. இதன் ஒலி யார் காதில் விழுகிறதோ அவர்களின் குடும்பத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். ஜி.கோபி, காஞ்சிபுரம்* காது குத்தும் போது குழந்தையை தாய்மாமன் மடியில் அமரச் செய்வது ஏன்?தாயை 'அம்மா' என்றும், தாய்மாமனை 'அம்மான்' என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.கே.பாக்கியம், சிவகங்கை* அஷ்டமத்துச்சனியால் பாதிப்பு ஏற்படுமா... பரிகாரம் என்ன உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆயுளுக்கு கண்டம் ஏற்படலாம். திங்களன்று சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள்.