கேளுங்க சொல்கிறோம்
ஏ.ராகவி, டில்லி. *ஆடம்பரமாக ஆடை உடுத்தி சிலர் கோயிலுக்கு செல்கிறார்களே...பட்டு உடுத்தி, நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வதில் தவறில்லை. அம்பாளுக்கு பட்டு, ஆபரணங்களால் அலங்காரம் செய்கிறோமே! அவரவர் தகுதிக்கேற்ப உடுத்துவது தவறல்ல. நம் கலாசாரத்துக்கு விரோதமாகத்தான் உடுத்தக் கூடாது. எம்.ஹேமா, சென்னை.*அக்னி ஹோத்ரம் என்றால் என்ன? வீட்டில் செய்யலாமா? தினமும் அந்தணர்கள் வீட்டில் செய்யும் வேள்வியே அக்னி ஹோத்ரம். வீட்டில் வேள்வி செய்ய விரும்புவோர் கணபதி ஹோமத்தை நடத்தலாம். என்.நரேந்திரன், நாகர்கோவில்.*'சனிப்பிணம் தனியாகப் போகாதாமே'உண்மையா?பயம் வேண்டாம். பிரேதத்துடன் ஒரு விறகுக்கட்டையை வைத்துச் சென்றால் போதுமானது.எல்.விக்னேஷ், திருப்பூர். *கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்? மூடியிருக்கும் செம்பில் தீர்த்தம் இருந்தால் அதை தினமும் பூஜிக்கலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செம்புகளில் தீர்த்தம் இருந்தால் அபிஷேகம் செய்ய கோயிலுக்கு கொடுங்கள். எஸ்.மாலா, திருநெல்வேலி.*கோயிலில் குழந்தை சிறுநீர் கழித்தால் தோஷம் ஏற்படுமா?குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால் தோஷம் ஏற்படாது. அந்த இடத்தை துாய்மைப்படுத்தினால் போதும்.எஸ்.லதா, விழுப்புரம்.*நவரத்தின மோதிரம் அணிந்தால் நன்மை கிடைக்குமா? ஒருவர் பிறந்த ராசி, நடசத்திரத்திற்குரிய நவரத்தின கல்லை மோதிரமாக அணிந்தால் நவக்கிரகங்களால் நன்மை கிடைக்கும்டி.கந்தசாமி, சிவகங்கை.* சிவனும் பார்வதியும் இருக்கும் போது விநாயகரை 'முதற்கடவுள்' என்பது ஏன்?தடைகளை போக்கும் சக்தியை விநாயகருக்கு வழங்கியவர் சிவபெருமான். 'முதற்கடவுள்' என்னும் சிறப்பையும் வழங்கினார். இதனாலேயே விநாயகரை முதலில் வழிபடுகிறோம். தன் குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து அழகு பார்ப்பவரே நல்ல பெற்றோர்கள்.பி.லட்சுமி, பெங்களூரு.*சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?காமதேனு, கற்பக மரம் போல நினைத்ததை வழங்கும் ரத்தினத்திற்கு சிந்தாமணி என்று பெயர். இதைப் போல பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவர் சிந்தாமணி விநாயகர். அ.முருகன், திருத்தணி.*வீட்டிலேயே அன்னதானம் செய்யலாமா?தாராளமாகச் செய்யலாம். அன்னதானம் செய்த பின்னரே நாம் உண்ண வேண்டும்.