உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எல்.பாரதி, புதுடில்லி*செருப்பு அணிந்தபடி கோலமிடலாமா...கூடாது. அது கோலத்தை அவமதிப்பதாகும். கே.விவேக், வானுார், விழுப்புரம்*விநாயகருக்கு தேங்காய் மாலை, பைரவருக்கு மிளகாய் மாலை சாற்றுகிறார்களே...?தேவையில்லை. நடைமுறையில் இல்லாத புதுப்பழக்கம் அண்மைக் காலத்தில் புகுத்தப்பட்டு விட்டது.வி.வனஜா, குன்னுார், நீலகிரி*விவாகரத்து பெற்ற தம்பதி இணைந்தால் தாலி அவசியமா?பெண்கள் தாலியை கழற்றாமல் இருப்பதே நல்லது. கழற்றி இருந்தால் நல்லநாளில் மீண்டும் அணிவது அவசியம்.சி.மணிவண்ணன், பெங்களூரு*செய்வினையில் இருந்து விடுபட யாரை வழிபடலாம்?தினமும் பைரவர், சரபேஸ்வரர், சனிக்கிழமையில் சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.எம்.ராதா, ஆவடி, திருவள்ளூர் *எந்த வயதில் காசி யாத்திரை செல்வது நல்லது?எந்த வயதிலும் செல்லலாம். டி.வசந்தி, பழநி, திண்டுக்கல்*சாஸ்திரம், சம்பிரதாயத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா?கூடாது. வருங்கால தலைமுறையினர் நம் தர்மத்தை பின்பற்ற முடியாமல் போகும். வி.சங்கரி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி*முளைப்பாரி வளர்க்கும் போது பின்பற்ற வேண்டியவை என்ன?மனத்துாய்மை, ஒழுக்கம், விரதம், தினசரி வழிபாடுகளை முறையாக பின்பற்றுங்கள்.ஆர்.ரதி, களக்காடு, திருநெல்வேலி*அலகு குத்துதல், தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல் இவற்றை பின்பற்றுவது சரியா?தீ மிதித்தல், அலகு குத்துதல் பாரம்பரியமானவை. ஆனால் தலையில் தேங்காய் உடைப்பதை தவிர்ப்பது நல்லது. பி.தமயந்தி, மேலுார், மதுரை*கோயிலில் விற்கும் நெய் தீபத்தை பயன்படுத்தலாமா?தரமற்ற நெய்யை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக எண்ணெய் தீபங்களை பயன்படுத்தலாம்.ஆர்.மஞ்சுளா, வேளச்சேரி, சென்னை*எங்களின் குலதெய்வம் கோயிலில் பாலாலயம் செய்துள்ளனர். நேர்த்திக்கடன் செலுத்தலாமா?செலுத்தலாம். திருப்பணிக்கு பொருளுதவி செய்யுங்கள்.