கேளுங்க சொல்கிறோம்!
* அமாவாசை, பவுர்ணமி இரண்டில் சிறப்பாக வணங்க தனித்தனி தெய்வங்கள் உள்ளனவா?ஆர். மீரா, சிதம்பரம்தேய்பிறையின் முடிவு அமாவாசை. வளர்பிறையின் முடிவு பவுர்ணமி. சிவம் என்பது ஒடுங்குதல்(தேய்தல்) தத்துவம். சக்தி என்பது விரிதல்(வளர்தல்) தத்துவம். விதை நிலையில் உயிர் சிவமாக ஒடுங்கி இருக்கிறது. அதே விதை வளர்ந்து மரமாகி விரியும் போது சக்தி பெருகுகிறது. இதன் குறியீடாகவே சிவராத்திரியை ஒரு நாளும்(ஒருமை), நவராத்திரியை ஒன்பது நாளும்(பன்மை) கொண்டாடுகிறோம். அமாவாசையில் சிவனையும், பவுர்ணமியில் அம்பிகையையும் வழிபடுவது சிறப்பு.* பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்?ஜெ.சங்கர்ராமன், மீஞ்சூர்தேய்பிறை அஷ்டமியன்று ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை, விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். விரத நாளில் காலையில் நீராடி பைரவருக்கு மலர் சூட்டி பால் பாயாசம், சுண்டல், பழங்கள் நைவேத்யம் செய்து வழிபடுங்கள். ஞாயிறன்று ராகு காலத்திலும்(மாலை 4.30- 6.00) இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.* தெற்கு பார்த்த வாசல் வீட்டை சிலர் விரும்புகிறார்களே! ஏன்?பாபு ரக்ஷணி, கடலூர்'வடக்கு பார்த்த மச்சைக் காட்டிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு மேல்' என்று ஒரு சுலவடையே சொல்வதுண்டு. தென்றல் வீசுவது தெற்கில் இருந்து தான். தெற்கு பார்த்த வீட்டிற்குள் காற்றோட்டம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது. 'வாயு புகாத வீட்டில் வைத்தியம் புகுவான்' என்பது இதனால் தான்.* தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் தீர என்ன பரிகாரம் செய்யலாம்?கிருஷ்ணன், சென்னைசெய்ததை பாவம் என்று உணர்வதே சிறந்த பரிகாரம் தான். இனி வாழ்வில் பாவச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியெடுத்தாலே போதும். அன்னதானம், பிதுர் தர்ப்பணம், தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு, பசு தானம் போன்ற புண்ணிய செயல்களாலும் பாவம் நீங்கும். கங்கையில் நீராடுவதை சிறந்த பாவநிவர்த்தி பரிகாரமாக சாஸ்திரம் கூறுகிறது.* தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபலம் உண்டாகுமா?ச.கண்ணன், வத்தலக்குண்டுதிருமணம், புத்திரப்பேறு, தொழில் வளம், பொருளாதாரம் சிறக்க குரு பகவானின் அருள் தேவை. இதையே குருபலம் என்று குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் ஒன்றான இவருக்கு தேவகுரு என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இவர் பெயர்ச்சியாகிறார். சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி உலக குருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உலக குருவை வழிபட்டால், தேவகுருவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். * கணவரை இழந்த தாயிடம் முதலில் ஆசி வாங்கலாமா?எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டிதாயிற் சிறந்த கோவிலும் இல்லை, அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ... என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா! 'மாத்ரு தேவோ பவ' என்று வேதம் அம்மாவை முதல் தெய்வமாகப் போற்றுகிறது. தன் குழந்தை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்த தாய்க்கு இணை யாருமில்லை. எந்த நிலையிலும் தாயே முதல் தெய்வம். தாயிடம் ஆசி பெற்ற பின்பே மணவாழ்வைத் துவங்க வேண்டும்.