மனப்பாடப்பகுதி
UPDATED : டிச 09, 2016 | ADDED : டிச 09, 2016
புத்தி தரும் தீபம்; நல்ல புத்திர சம்பத்து முதல்சித்தி தரும் தீபம் சிவதீபம் சக்திக்குஉயிராகும் சோணமலை ஓங்கி வளர் ஞானப்பயிராகும் கார்த்திகை தீபம்பொருள்: சோணமலை என்னும் திருவண்ணாமலையில் பிரகாசிக்கும் திருக்கார்த்திகை தீபம் ஆன்மிக ஞானத்தை வளர்க்கும் பயிராகும். பார்வதியன்னைக்கு அதுவே உயிராக இருக்கிறது. இதனைத் தரிசிப்பவர்களுக்கு நல்ல புத்தி, குழந்தைப்பேறு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். இந்த சிவதீபத்தை வணங்கிப் போற்றுவோம்.குறிப்பு: கார்த்திகைத் தீப வெண்பா பாடல்