மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜன 06, 2017 | ADDED : ஜன 06, 2017
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்உண்டை கொண்ட ரங்கவோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்நண்டை உண்டு நாரை பேர வாளைபாய நீலமேஅண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே!பொருள்: கூந்தலைக் கொண்டையாக முடிந்த, கூனியின் முதுகு நிமிரும்படி வில்லால் அடித்து மனம் மகிழ்ந்தவன் ராமன். அப்பெருமான் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறான். நீர்வளம் மிக்க அங்கு நாரைகள் நண்டைத் தின்று மகிழ்வுடன் வாழ்கின்றன. வாளை, கெண்டை மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. கருநிற நெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.குறிப்பு: திருமழிசையாழ்வார் பாடல்