உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

கண்ணாய் ஏழு உலகும் கருத்தாய அருத்தமுமாய்பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரேமண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமேஅண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே.பொருள்: ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கெல்லாம் கண்ணாக இருப்பவனே! மெய்ப்பொருளானவனே! இனிய இசைநயம் மிக்க தமிழ்மொழியாக விளங்குபவனே! ஒளிச்சுடராகத் திகழ்பவனே! பூஞ்சோலைகள் நிறைந்த திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கம் போன்றவனே! மேலான சிவனே! உன்னையன்றி வேறொருவரை நான் நினைக்க மாட்டேன்.குறிப்பு: சுந்தரரின் தேவாரப்பாடல்