உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண் பிறையானைப் பெண்ணோ டாணாகிய பெம்மானை இறையானை ஏர்கொள் கச்சித்திரு ஏகம்பத்து உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே. (ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்)பொருள்: வேதப் பொருளே! களங்கமில்லாதவரே! ஜடாமுடியில் வெண் பிறைநிலவைத் தாங்கியவரே! பார்வதியை ஒரு பாகமாக கொண்டவரே! எங்களின் தலைவரே! அழகிய காஞ்சிபுரத்தில் வீற்றிருப்பவரே! உம்மையன்றி வேறொருவரை என் மனதாலும் சிந்திக்க மாட்டேன்.