மனப்பாடப்பகுதி
UPDATED : மார் 24, 2017 | ADDED : மார் 24, 2017
நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானை சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே. (திருஞான சம்பந்தர் தேவாரம்)பொருள்: நற்குணம் உள்ளவரே! குற்றம் இல்லாதவரே! வெள்ளை நிற காளை வாகனத்தில் அமர்ந்தவரே! பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரே! அழியாத அருள் தருபவரே! திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருப்பவரே! என் மனம் குளிர உன்னை வணங்குகிறேன்.