உள்ளூர் செய்திகள்

சிவனுக்கு பிடித்த 8

கீழ்கண்ட எட்டு பண்புகளே சிவபெருமானுக்கு பிடித்த மலர்களாகும் என பட்டியல் இடுகிறார் திருநாவுக்கரசர். * அகிம்சை - மனம், மொழி, மெய்களால் தீங்கு செய்யாதிருத்தல். * இந்திர ஜபம் - ஐம்புலன்களை (மெய்,வாய் கண், காது, மூக்கு) அடக்குதல் * தைரியம் - துன்பத்தைக் கண்டு கலங்காதிருத்தல். * பொறுமை - பிறர் செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல் * சவுசம் - மனம், உடலை துாய்மையாக வைத்தல் * அத்ரோகம் - கோபத்தை யார் துாண்டினாலும் அதற்கு இடம் கொடுக்காதிருத்தல் * நாணம் - தீய செயல்களை செய்ய வெட்கப்படுதல் * சத்தியம் - எண்ணம், பேச்சால் உண்மையை பின்பற்றுதல்