ஸ்ரீநாராயணீயம்
த்யாயாமி தக்ஷிணகதே ஹரிவர்ஷ வர்ஷே ப்ரஹ்லாத முக்யபுருஷை: பரிஷேவ்ய மாணம் I உத்துங்கஷாந்த தவளா க்ருதி மேக ஷுத்தஜ்ஞான ப்ரதம் நர ஹரிம் பகவன் பவந்தம் IIஅம்கண் ஞாலம் அஞ்ச அங்குஓர் ஆள்அரிஆய்அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்தபுனிதன்இடம்பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங்கண் ஆளிஇட்டு இறைஞ்சும்சிங்கவேழ்குன்றமே.என்னும் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் கூறியபடி, சிங்கவேள் குன்றத்தில் உள்ள நரசிம்மரைப் போற்றுகிறார் பட்டத்திரி. இலாவ்ருதம் என்னும் கைலாயத்திற்கு தெற்கிலுள்ள ஹரிவர்ஷம் என்னும் பகுதியில் இருப்பவரும், பிரகலாதனால் வணங்கப்பட்டவரும், ஞானம் அளிப்பவரும், வெண்ணிறம் கொண்டவருமான நரசிம்மரைத் தியானிப்பதாக பட்டத்ரி கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பவருக்கு தேவையற்ற பயம் மறையும். துணிச்சல் அதிகரிக்கும்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in