சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* வைணவர்களால் கோயில் என அழைக்கப்படும் தலம் ஸ்ரீரங்கம்.* 108 திவ்யதேசங்களில் 88 கோயில்களை பாடியவர் திருமங்கையாழ்வார். * பூமியில் இல்லாத திவ்ய தேசங்கள் பாற்கடல், பரமபதம். * காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு இடையே உள்ள திவ்யதேசம் ஸ்ரீரங்கம்.* விநாயகர் மீது பிள்ளைத்தமிழ் பாடியவர் சிவஞான முனிவர். * நன்னுாலுக்கு முதலில் உரை எழுதியவர் மயிலைநாதர். * பன்னிரு திருமுறை பாடல்களைப் பாடுவோருக்கு ஓதுவார் என்று பெயர். * பிள்ளை பாதி புராணம் பாதி எனப்படும் நுால் பெரிய புராணம். * திருப்பரங்குன்றம் தலபுராணத்தை பாடியவர் நிரம்பிய அழகிய தேசிகர். * சேய்தொண்டர் புராணத்தில் 41 முருகனடியார்கள் இடம் பெற்றுள்ளனர். * பரமபதத்தை அடைந்தோருக்கு நித்யசூரிகள் என்று பெயர். * திருமால் மீது பல்லாண்டு பாடப்பெற்ற திவ்யதேசம் மதுரை. * முதன் முதலில் பாடப்பட்ட பதிகம் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம்.* தமிழகத்தில் சைவ ஆதின மடங்கள் 18 உள்ளன.* எட்டாம் திருமுறையில் உள்ள பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார். * சிற்றிலக்கிய களஞ்சியம் எனப்படுவது பதினோராம் திருமுறை. * கந்தர்கலி வெண்பாவை பாடினால் பேச்சுத்திறன் உண்டாகும்.* முதல் ஆழ்வார்கள் எனப்படுபவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.* ஆதிவேதங்கள் எனப்படுபவை ரிக், யஜூர், சாமம்.* வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர்கள் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர்.* தேவார முதலிகள் எனப்படுபவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.* பட்டினத்தார் வியந்த நாயன்மார்கள் சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர்.* சிவன் கோயில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்பு பெற்றிருக்கும்.* முருகப்பெருமானை திதி - சஷ்டி, கிழமை - வெள்ளி, நட்சத்திரம் - கார்த்திகையில் வழிபடுவது சிறப்பு.* மனம், மொழி, மெய்களால் கடவுளை வழிபடுவதை திரிகரண சுத்தி என்பர்.* திவ்ய தேசங்களில் திருமால் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் சேவை சாதிப்பார்.