உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பணப் பரிவர்த்தனையை செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் செய்வது நல்லது. கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவராலும் பணத்தை திரும்ப கொடுக்க இயலும்.* கடவுள் சிலைகளை கல், உலோகம் என கருதக்கூடாது.* அரையர் சேவை என்பது நடனமாடியபடியே நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடுவதாகும்.* முதன் முதலில் அரையர் சேவையை கோயில்களில் தொடங்கியவர் நாதமுனிகள். * ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம், கர்நாடக மாநிலத்திலுள்ள மேல்கோட்டை ஆகிய திவ்ய தேசங்களில் அரையர் சேவை நடக்கிறது. * பெரிய புராணத்தில் 4287 பாடல்கள் உள்ளன. இதில் திருஞானசம்பந்தர் வரலாறு 1256 பாடல்களில் இடம் பெற்றுள்ளது. * திருஞான சம்பந்தர் பாடிய தேவார பாடல்களை திருக்கடைக்காப்பு என்று அழைப்பர்.* தேவாரம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் 'இரட்டைப்புலவர்கள்' (இளஞ்சூரியர், முதுஞ்சூரியர்)* விளக்கைத் தரையில் வைக்கக்கூடாது. பலகை மீது வைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களில் விளக்கைச் சுத்தம் செய்யலாம்.* உடல், மனம் நலமுடன் இருக்க இஷ்ட தெய்வத்திற்கு வாரம் ஒரு முறை விரதம் இருப்பது நல்லது. * பஞ்ச கன்னியர் - அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி. * பஞ்சரத்தினம் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். * பஞ்ச வர்ணம் - வெள்ளை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை. * பஞ்சமா பாதகம் - பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை. * மகாவிஷ்ணு ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில்.* பாகவத புராணத்தை எழுதியவர் செவ்வை சூடுவார்.