இந்த வாரம் என்ன
ஜூன் 17, ஆனி 3: முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி, மதுரை கூடலழகர் விடையாற்று உற்ஸவம். திருவிடைமருதுார் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு. இன்று மா,பலா, புளி வைக்க நன்று. ஜூன் 18, ஆனி 4 : அரியக்குடி சீனிவாசப்பெருமாள் விடையாற்று உற்ஸவம். கீழ்திருப்பதி வெங்கடேச பெருமான் திருமஞ்சனம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஜூன் 19, ஆனி 5: திண்டுக்கல் நிலக்கோட்டை குபேரபுரி சந்தான சீதளாதேவி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம். திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விடையாற்று உற்ஸவம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பல்லக்கு வாகனம், சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் திருமஞ்சனம். ஜூன் 20, ஆனி 6: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்பபாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சனம்.ஜூன் 21, ஆனி 7: சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூட்டியருளல். அஹோபிலமடம் 23 வது பட்டம் அழகிய சிங்கர் வைபவம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தேர்.ஜூன் 22, ஆனி 8: திருப்பதி ஏழுமலையான் அபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சன சேவை. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் நீராட்டு விழா, கலிக்காம நாயனார் குருபூஜைஜூன் 23, ஆனி 9: முகூர்த்தநாள். சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. இன்று செடி கொடி வைக்க நன்று