உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜூலை 15, ஆனி 31: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் தேர். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.ஜூலை 16, ஆனி 32 : குச்சனுார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வரதராஜருக்கு திருமஞ்சனம். கருட தரிசனம் நன்று. ஜூலை17, ஆடி 1: தட்சணாயன புண்ணிய காலம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் திருமஞ்சனம் ஜூலை18, ஆடி 2: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கருடாழ்வார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமஞ்சனம். ஜூலை19, ஆடி 3: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை. நத்தம் மாரியம்மன் கோயில் தேர். ஜூலை20, ஆடி 4: தேவகோட்டை ரெங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமான் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்மர் திருமஞ்சனம். ஜூலை21, ஆடி 5: சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.