உள்ளூர் செய்திகள்

தர்மம் செய்

மனிதனுக்கு முக்கியமானது முகம். அதை விட முக்கியமானது மனசு. இது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைப் படியுங்கள். உங்களுக்கு புரியும். 'கண்ணாடியில் பார்க்கிறோம். நம் முகம் தெரிகிறது. கண்ணாடி அழுக்காக இருந்தால் முகம் தெரியுமா... துடைத்து விட்டுப் பார்த்தால் தெரியும்.துடைத்த கண்ணாடியாக இருந்தாலும் அது ஆடிக் கொண்டிருந்தால் பிம்பம் தெரியுமா? அதுவும் ஆடிக் கொண்டே இருக்கும். மனமும் கண்ணாடி போலத்தான். தீய எண்ணம் வளர்ந்து விட்டால் மனம் அழுக்காகும். நல்ல எண்ணம் இருந்தால் மனம் சுத்தமாக இருக்கும்.மனதை அலை பாய விடாமல் நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தினால் ஓரிடத்தில் நிலையாக இருக்கும். அதில் கடவுள் (பரமாத்மா) பிரதிபலிப்பார். கடவுளை பற்றி அறிய வேண்டுமானால் மனம் அழுக்கு இல்லாமல், அசையாமல் இருக்க வேண்டும்.பல ஆண்டாக புழங்கிய தாமிரச் சொம்பு கிணற்றடியில் கிடக்கிறது என்றால் அதைச் சுத்தப்படுத்த எத்தனை முறை தேய்க்க வேண்டும்? எந்தளவுக்கு தேய்க்கிறோமோ அந்தளவுக்கு அது சுத்தமாகும். இத்தனை காலம் எத்தனையோ கெட்ட செயல்களைச் செய்து மனதை அழுக்காக்கி விட்டோம். அதை போக்க வேண்டுமானால், நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். தானம், தர்மம் செய்ய வேண்டும்.. கர்ம அனுஷ்டானங்களை (அன்றாட கடமை, வழிபாடு) பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் மனம் சுத்தமாகும். ஒழுக்கம் மனதில் குடிகொள்ளும். சரி... சொம்பு சுத்தமாகி விட்டது என்றால் எல்லாம் சரியாகி விடுமா? தொடர்ந்து தேய்க்காவிட்டால் அது அழுக்காகி விடும். அதுபோல் நல்ல செயல்களின் மூலம் மனதை சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மனம் நம்மை விட்டு ஓடி விடும். அப்போது ஆத்மா மட்டும் நிற்கும். அந்நிலையில் சுத்தம் செய்ய தேவை இருக்காது. ஏனெனில் அந்த ஆத்மா புனிதமாகி விட்டது எனப்பொருள். மனசை சுத்தப்படுத்தும் வேலையை இப்போதே தொடங்குங்கள்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள். * மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள். * தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதே.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com