உள்ளூர் செய்திகள்

எங்கேயும்... எப்போதும்...

காஞ்சி மஹாபெரியவரிடம், 'நல்லது நடந்தால் தெய்வ அருள் என்கிறோம். ஆனால் துன்பம் வந்தால் வருந்துகிறோம். ஏன் இந்த முரண்பாடு' எனக் கேட்டார் பக்தர் ஒருவர். 'நல்லதை தருகிற அம்பாளே, கெட்டதையும் தருகிறாள். ஏன் என்பது நமக்குத் தெரியாது. வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் சொல்லும் கதையைக் கேட்டால் இந்த உண்மை புரியும்' என்றார் மஹாபெரியவர்.கழுதை மீது உப்பு மூடையை ஏற்றியபடி துாரத்தில் உள்ள சந்தைக்கு புறப்பட்டார் ஒரு வியாபாரி. 'இன்று அதிக லாபத்திற்கு விற்க வேண்டும்' என எண்ணினார். திடீரென மழை பெய்ததால் உப்பு கரைந்தது. விதியை நொந்தபடி வீட்டுக்கு செல்லத் தொடங்கினார். மாலை நேரமாகி விட்டதால், 'வியாபாரிகள் பணத்துடன் வருவார்கள்' என எதிர்பார்த்து திருடர்கள் சிலர் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். அவர்களைக் கண்டதும் வியாபாரிக்கு குலை நடுங்கியது. 'என்னிடம் பணமில்லை' எனக் கத்தினார். ஆனாலும் திருடர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அந்தக் காலத்தில் துப்பாக்கிக்கு தோட்டா கிடையாது. வெடி மருந்தை அதிக அழுத்தத்துடன் அதில் வைத்திருப்பர். 'சுட்டால் தான் பணத்தைக் கொடுப்பான்' என சொல்லியபடியே வானத்தை நோக்கி சுடத் தயாரானான் ஒருவன். ஆனால் மழையின் ஈரத்தால் மருந்து வெடிக்கவில்லை. இந்த நேரத்தில் வழிப்போக்கர் சிலர் வரவே திருடர்கள் ஓடினர். 'நல்ல வேளை... மழை வந்ததால் பிழைச்சேன்' என வானத்தை நோக்கி கும்பிட்டார் வியாபாரி. எங்கேயும், எப்போதும் நல்லதையே கடவுள் தருகிறார்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com