உள்ளூர் செய்திகள்

பாம்பைக் கண்டாலும்...

கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கியைக் கொன்றார் கிருஷ்ணர். இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரனான அகாசுரன் பழிதீர்க்க துடித்தான். கிருஷ்ணரின் அண்ணன் பலராமன், ஆயர்பாடி சிறுவர்களையும் கொல்ல முயன்றான். தான் விரும்பிய வடிவத்தில் தோன்றும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. மலைப்பாம்பு வடிவில் தோன்றிய அவன், சீற்றத்தால் அனைவரையும் பயமுறுத்தினான். ஆனால் 'கிருஷ்ணர் இருக்க கவலை எதற்கு?' என்று சிறுவர்கள் பாம்பைக் கண்டு சிரித்தனர். அதன் வாய்க்குள் நுழைந்த கிருஷ்ணர் தன் தோற்றத்தை விரிவுபடுத்தவே அகாசுரன் ஆடிப்போனான். ஒரு நிமிடத்திற்குள் மூச்சு திணறி இறந்தான்.