இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி
காஞ்சி மஹாபெரியவரின் கையில் மரத்தினால் ஆன தண்டம் இருக்கும். அத்துடன் அவரின் அருகில் தண்ணீர் நிறைந்த மரச்சொம்பும் இருக்கும். தவசக்தி வாய்ந்தது தண்டம். அதை மரக்குச்சியாக பார்க்காமல் வணங்குவது நல்லது. ஒருமுறை கர்நாடகாவில் யாத்திரை சென்றார் மஹாபெரியவர். அப்போது அங்கு மழைக்காலம். அருகில் ஓடிய நதியில் நீராட விரும்பினார். அங்கு செல்லும் பாதை எங்கும் வழுக்கும் அபாயம், கரடு முரடான பாறைகள் இருந்ததால் உடன் வந்த சீடர்கள் பயந்தனர். 'வேண்டாமே பெரியவா... சேறும், பாறைகளும் அதிகமாக உள்ளன. நதியின் ஆழத்தையும் நம்மால் கணிக்க முடியாது' என சன்னக்குரலில் சுவாமிகளிடம் தெரிவித்தனர். ஆனால் மஹாபெரியவர் சிறிதும் தயங்கவில்லை. ஓடும் நதியில் வேகமாக இறங்கி தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வது போல் தண்டத்துக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கினார். பின்னர் தான் நீராடுவதற்காக இடுப்பளவு ஆழத்திற்குப் போய் நின்று தண்டத்தை அணைத்தபடி வடக்கு திசையை நோக்கி கைகுவித்து வணங்கினார்.வெள்ளத்தின் நடுவே ஓரிடத்தில் தண்டத்தை மண்ணில் ஊன்றி வைத்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள். தண்டம் இழுத்துச் செல்லாத விதத்தில் அந்த இடத்தில் மட்டும் தண்ணீரின் வேகம் குறைந்தது.அடிபணிந்தது ஆற்றுவெள்ளம். சுவாமிகள் நீராடும் வரை தண்டம் அசையவில்லை. நீராடியதும் ஆடையை மாற்றிக் கொண்டு நெற்றியில் திருநீறு இட்ட பின்னரே தண்டத்தைக் கையில் எடுத்தார். அடுத்த விநாடியே அந்த இடத்திலே வெள்ளம் பெருக்கெடுத்தது. இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்தி மஹாபெரியவருக்கு உண்டு என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று. காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும். குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து. நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com