உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 20

செல்வம் அருளும் க்ஷிப்ரப்ரஸாத கணபதிஎனில் இறைவனின் அருள் என்று பொருள். க்ஷிப்ர என்பதற்கு வி பிரசாதம் கே. பொருள். அடியார்கள் வேண்டுவதை விரைந்து தந்து அருள் செய்பவர் இ இதை உணர்த்தும் வகையில் இவர்தம் ஆறு திருக்கரங்களில் ஒன்றில், வி சிறப்புடைய கற்பகக் கொடியை ஏந்தியவராய், திருமுடியில் பிறைமத எழுந்தருளியிருக்கிறார்.தியான சுலோகம்த்ருதபாசாங்குச கல்பலதா ஸ்வதந்த ஸ்ச பீஜபூர யுத:சசிசகல கலிதமௌளி: த்ரிலோசந அருணஸ்ச கஜவதந: |பாஸுர பூஷண தீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்ட ரோல்லஸித:விக்ந பயோதர பவந: கரத்ருத கமலஸ் ஸதாஸ்து மே பூத்யை ||பாசாங்குச - பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களையும்கல்பலதா - கற்பகக் கொடியையும்ஸ்வதந்த ஸ்ச - தனது ஒடித்த தந்தத்தையும்பீஜபூரயுத: - மாதுளம் பழத்தையும்த்ருத - தலையில் தாங்கியிருக்கிறசசிசகல - பிறைத் துண்டத்துடன்கலிதமௌளி: - விளங்குகின்ற திருமுடியை உடையவரும்த்ரிலோசந: - முக்கண்ணரும்அருணஸ்ச - சிவந்த நிறத் திருமேனியரும்கஜவதந: - யானை முகம் கொண்டவரும்பா'ஸுர - ஒளிவீசுகின்ற ரத்தினங்களால் ஆனபூஷண - அணிந்துள்ள ஆபரணங்களால்தீப்தோ - பிரகாசிப்பவரும்ப்ருஹது'த'ர: - பெருவயிற்றை உடையவரும்பத்ம - தாமரை மலராகியவிஷ்டர - இருக்கையில்உல்லஸித: - வீற்றிருப்பவரும்விக்ந பயோதர - தடை எனும்பவந: - மேகக் கூட்டத்தை விரட்டும் புயல் காற்றாய் உள்ளவரும்கரத்ருத கமல: - கையில் ஏந்திய தாமரையை உடையவருமான இந்த கணபதியானவர்ஸதா - எப்போதும்மே - எனக்குபூத்யை - செல்வத்தை வழங்குபவராகஅஸ்து - விளங்கி இருக்கட்டும். (செல்வமளிக்கட்டும்).பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.கற்பகக் கொடி: தேவலோக அதிசயமான கற்பகமரம் போல, அடியவர்களுக்கு வேண்டுவதை அருள்பவர் என்பதைக் காட்டுகிறது.ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையையும் ஆயுதமாக ஏந்தியதால் மனஉறுதியையும் கொண்டு, செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவதுஅங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.மாதுளம் பழம்: இப்பழத்தின் விதை, படைப்பையும் ஒடுக்குவதையும் சுட்டுவது.செந்தாமரை: ஞானம், ஆரோக்கியத்தை குறிப்பது.பலன்: விரும்பிய பயன் விரைவில் கிடைக்கும்; தடை நீங்கும்; செல்வம் பெருகும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்