கனவு பலித்தது
காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. ஒரு நாள் அவருடைய மனைவி கருவுற்றிருப்பதாக சொன்னாள். உடனே மகிழ்ந்த அவர் குழந்தைக்கு மஹாபெரியவரிடம் சென்று பெயரை சூட்ட வேண்டும் என நினைத்தார். நாட்கள் நகர்ந்தது. வளைகாப்பு முடிந்த அன்று இரவு அவரது மனைவியின் கனவில், '' உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்; 'லட்சுமி நரசிம்மன்' என குழந்தைக்கு பெயரிடு' என நரசிம்மர் உத்தரவிட்டார். பதட்டமாக கண் விழித்த அவள் கனவு பற்றி கணவரிடம் சொன்னாள். இதைக் கேட்ட அவருக்கு தலை சுற்றியது. 'நரசிம்மர் இட்ட உத்தரவை நிறைவேற்றா விட்டால் தெய்வ குற்றம் நேருமே! நினைத்தபடி மஹாபெரியவரிடம் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமே' எனக் குழம்பினர். குழந்தை பிறந்த பிறகு பார்க்கலாம் என அப்போதைக்கு ஒத்தி வைத்தனர். ஆண் குழந்தை பிறந்தது. வேண்டுதல்படி காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரின் முன் குழந்தையைக் கிடத்தினர். அருள் பொங்க பார்த்தார் சுவாமிகள். கனவில் நரசிம்மர் இட்ட கட்டளையை சொல்ல மனைவி முயன்ற போது, ''இது ஆண் குழந்தை தானே?'' எனக் கேட்டார். அவளும் தலையசைத்தாள். ''பக்த பிரகலாதனுக்கு அருள்புரிந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான 'லட்சுமி நரசிம்மா' என வாய் நிறையக் கூப்பிடுங்கள். கடவுளின் அருளால் நலமுடன் வாழ்வான்'' என ஆசியளித்தார். சுவாமிகளின் தீர்க்க தரிசனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டனர் தம்பதியினர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.