உள்ளூர் செய்திகள்

பூமாலையும் பாமாலையும்

பூமிதேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள நந்தவனத்தில் அவதரித்தாள். அங்குள்ள ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நள வருடம் ஆடிப்பூர நட்சத்திரத்தன்று ஆண்டாளைக் கண்டெடுத்தார் பெரியாழ்வார். அப்போது 'கோதை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்து வருவீராக' என்று பெருமாளும் அசரீரியாக அருள்புரிந்தார். அப்படியே ஆண்டாளும் வளர, கண்ணன் மீது அவளுக்கு இருந்த பக்தி காதலாக மாறியது. அவனையே தன் மணாளனாக நினைத்து வாழத் தொடங்கினாள். அவளின் அன்புக்காக பூமாலை, பாமாலையை ஏற்று சுவாமி அருள்புரிந்தார். அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் உருவானது.