உள்ளூர் செய்திகள்

இதில் தான் ஆத்ம திருப்தி

திருடன் ஒருவன் அன்றைய பணியை முடித்துக் கொண்டு, ஒரு மண்டபத்தில் ஓய்வெடுத்தான். அங்கு துறவி ஒருவர் கண்களை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைப் பார்த்த திருடன், ''இவனும் நம்மைப் போல திருடன் போல, அதனால் தான் யாருக்கும் தெரியாமல் காட்டில் ஒளிந்திருக்கிறான்' என்று நினைத்தான். இவன் இருக்கும் இடத்தில் தங்கினால், தான் திருடிய பொருளுக்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, அங்கிருந்து வெளியேறினான்.வழியில் ஒரு குடிகாரன் வந்தான்.எவ்வளவு குடித்தாலும் சுய நினைவை இழப்பதில்லை என்பதில் அவனுக்கு அலாதி நம்பிக்கை. அந்த மண்டபத்தைக் கடந்தான் குடிகாரன். சமாதி நிலையில் இருந்த துறவியைக் கண்டதும், “இவன் சரியான மிடாக்குடியன் போல. அசையாமல் தூங்குகிறான்,” என்று பிதற்றிய படியே சென்றான். இருவர் வந்து சென்றதையும் அறியாத துறவி, சிவனே என கண்மூடி இருந்தார்.திருடன் உலகத்தில் பார்ப்பதை எல்லாம் திருட்டு எண்ணத்துடனே பார்க்கிறான்.குடிகாரனின் எண்ணங்கள் குடிப்பழக்கத்தைச் சுற்றியே அமைகின்றன.நாம் எதை எண்ணுகிறோமோ, அதுவாகவே மாறி விடுகிறோம்.தியானத்திலிருந்த துறவியைப் போல, உண்மை தன் நிலையை வெளிக் காட்டாமல் மவுனமாக இருந்து விடுகிறது. இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.உண்மையைக் கடைபிடிப்பதிலுள்ள ஆத்மதிருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை.