நல்லவரோடு உறவாடுங்கள்
UPDATED : பிப் 02, 2016 | ADDED : பிப் 02, 2016
*புனித கங்கை நம் பாவத்தைப் போக்குவது போல, நல்லவர்களின் உறவும் பாவத்தைப் போக்கி புண்ணியத்தை தரும்.* வெளியுலகப் பொருட்களைப் பற்றியே நம் மனம் சிந்திக்கிறது. கடவுளை சிந்திக்க மட்டும் அதை பயன்படுத்துங்கள்.*ஆனந்தத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். அது நமக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதை நாம் உணராமல் இருக்கிறோம். *எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் அதற்கான பயனை தந்தே தீரும்.ரமணர்