வாழ்வுக்கு யார் பொறுப்பு?
UPDATED : செப் 29, 2013 | ADDED : செப் 29, 2013
* ஒவ்வொரு மனிதனும் வலிமையும், தெய்வீகத்தன்மையும் கொண்டவனே. * உடையில் மாற்றம் செய்வது மட்டும் சந்நியாசம் ஆகாது. மனதிலுள்ள ஆசாபாசத்தை துறப்பதே உண்மையான துறவு.* நீ ஒருவரைத் திட்டினால் அது உன்னையே ஒருநாள் வந்தடையும். நீ ஒருவருக்குக் கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். ஏனென்றால் நீ வேறு, பிறர் வேறு அல்ல.* உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதையே பணிவு என்கிறோம். தூய்மையில்லாதவன் செய்யும் வணக்கம் ஒரு ஏமாற்றுவேலையே.* குழப்பில்லாத மனமே அமைதியின் பிறப்பிடம். அமைதியில் தான் ஆனந்தம் இருக்கிறது.* வாழ்வுக்கு கடவுளே பொறுப்பானவர் என்ற நம்பிக்கையோடு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதே சரணாகதி. - ரமணர்