பெற்ற தாயைப் போற்றுங்கள்
UPDATED : நவ 15, 2015 | ADDED : நவ 15, 2015
* தாய் மண்ணை வணங்குங்கள். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருங்கள்.* பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.* பாரத அன்னையின் புதல்வர்கள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.* உணவிலும், உடையிலும் எளிமையைக் கடை பிடியுங்கள். பேச்சிலும், செயலிலும் இனிமையைப் பின்பற்றுங்கள்.-சாய்பாபா