நல்லவரோடு பழகுங்கள்!
UPDATED : அக் 20, 2014 | ADDED : அக் 20, 2014
* பிறருக்குப் பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகத்தின் செயல். மன உறுதியும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும் தான் மனிதப்பண்பு.* நல்ல உணவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது போல, நல்ல உணர்வுகளால் உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது.* நாம் நல்லவர்களாக இருப்பதோடு, நாம் பழகுகின்ற நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.* நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதிவாய்ப்பு பெருகலாம். ஆனால் மனநிம்மதியை இழக்க நேரிடும்.- சாய்பாபா