செலவழிக்காமலே கரையும்
* உண்மையாயிருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அதை அதிகப்படுத்தியோ, குறைத்தோ திரித்துக் கூறாதீர்கள். * மனதில் எப்போதும் நல்ல சிந்தனை மட்டும் இருக்கட்டும். அதனால், உங்களைச் சுற்றி எப்போதும் தெய்வ மணம் பரவிக் கொண்டே இருக்கும். * மனிதர்கள் உலகைப் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதை விட தங்களின் உடல், மனம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். * உலகம் என்பது இன்பதுன்பம், வெற்றிதோல்வி என இரண்டின் கலப்பாகவே இயங்குகிறது. * செலவழித்தால் தான் செல்வம் கரையும். ஆனால், நம்முடைய வாழ்நாள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் குறைந்து கொண்டே போகும்.* தேவைகளைக் குறையுங்கள். ஆசைகளைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இதுவே நிம்மதிக்கு வழி. * தலைக்கு மேல் சூரியன் பிரகாசிக்கும்போது நிழல் விழுவதில்லை. அதுபோல, உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை எழும் போது சந்தேக நிழல் படிவதில்லை. - சாய்பாபா