பயப்படாதே! பயமுறுத்தாதே!
* பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரும்போது தான் முழுமையானதாக இருக்கும்.* கடவுள் சத்தியத்தின் வடிவம். எனவே, உண்மையைப் பின்பற்றினால் மட்டுமே அவரது அருளுக்குப் பாத்திரமாக முடியும். * செல்வம், அதிகாரம், பட்டம், பதவி எதுவும் நமக்கு நிலையானது அல்ல. என்றென்றும் உலகில் நிலையானவர் கடவுள் மட்டுமே. அவர் மீது பற்று வையுங்கள்.* மக்கள் சேவையில் ஈடுபடும் போது இதயம் தூய்மையானதாகவும், அனைவரும் சமம் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.* எங்கும் தேடி அலையத் தேவையில்லை. கனிவான பார்வையால் கண்களை விசாலமாக்குங்கள். உங்கள் கண் முன் இறைவன் வீற்றிருப்பதை உணர்வீர்கள். * யாரிடமும் எதற்காகவும் பயப்படாதீர்கள். அதேசமயம் யாரையும் பயப்படும்படிச் செய்யவும் கூடாது. * சுயநலத்துடன் எதையும் அணுகாதீர்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். மனம் எப்போதும் அமைதியில் திளைத்திருக்கட்டும். சாய்பாபா