உள்ளூர் செய்திகள்

அனுபவ பாடத்தை மறக்காதீர்

* வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.* ஆசை என்னும் உமி உயிரை மூடியிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை.* உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.* ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது வீண் புலம்பல், கவலை அனைத்தும் பறந்தோடி விடும்.* போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மை உலகிற்கு தெரியவரும்.-சாய்பாபா