நேரத்தை வீணாக்காதீர்
* ஆசைகளை அடக்கிக் கொள்வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது. * விலைவாசியைக் கட்டுபடுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், யாரும் மனதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டம் கொள்வதில்லை.* இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம். ஆனால், மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்ய முயற்சிப்பதில்லை.* புளிப்பு, கசப்பு அல்லாத இனிமையானவற்றை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால், தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனதையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். * வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.* மனிதப்பிறவி கிடைப்பது அரிது.அந்த அருமையை மக்கள் உணர்வதில்லை. உலக இன்பங்களை தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப்படுவதிலுமே நேரத்தை வீணாக்கிவிடுகிறோம். -சாய்பாபா